இன்ஜினியரிங் மாணவர்களுக்கு ஐஐடி வழங்கும் ரோபோ பயிற்சி
இன்ஜினியரிங் முடிப்பவர்கள் பன்னாட்டு தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பு பெற ரோபோ டெக்னாலஜி பற்றி தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. எனவே மாணவர்களுக்கு ரோபோ டெக்னாலஜி பயிற்சி வழங்க தொழில்நுட்ப கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது.
பன்னாட்டு தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்புகளை பெறும் வகையில் மாணவர்களை தயார்படுத்த வேண்டும் என்பது முதல்வர் ஜெயலலிதாவின் விஷன் 2023-ன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக இன்ஜினியரிங் கல்வியில் புதிய மாற்றங்களை அண்ணா பல்கலைக் கழகம் செய்து வருகிறது.
குறிப்பாக கல்லூரி பேராசிரியர்களுக்கு பாடம் நடத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களுக்கு 15 நாள் இணைப்பு வகுப்பு நடத்தப்பட்டது. அதில் பிளஸ் 2 பாடத்திற்கும் இனஜினியரிங் முதல் ஆண்டு பாடத்திற்கும் தொடர்புடைய பாடங்கள் கற்பிக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு கணக்கு அறிவியல் பாடங்களில் தேர்ச்சி அதிகரிக்கும் என்று அண்ணா பல்கலை நம்புகிறது.
இதைத் தொடர்ந்து இப்போது ரோபோ பயிற்சி பாடத்தை கூடுதலாக சேர்க்க தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஆலோசித்து வருகிறது.
இதுகுறித்து இயக்ககத்தின்முக்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது....
இன்ஜினியரிங் முடிக்கும் எல்லாருக்கும் நல்ல வேலை கிடைப்பதில்லை. முழு திறனுடன் அவர்களை அனுப்ப வேண்டியது கல்லூரிகளின் கடமை. இதை கல்லூரிகள் செய்வதில்லை. மேலும் மாணவர்களிடம் புதிய தொழில் நுட்பங்கள் குறித்த அப்டேட்டும் இல்லை. உதாரணமாக பன்னாட்டு தொழிற்சாலைகளில் ரோபோதொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. மனித உழைப்பை குறைத்து முக்கிய பணிகளை ரோபோக்கள் மூலம் செய்கின்றனர். இத்தகைய இன்டஸ்டிரியல் ரோபோ தொழில்நுட்ப பயிற்சி இன்ஜினியரிங் படிக்கும் எல்லா மாணவர்களுக்கும் கிடைப்பதில்லை.
மெக்கானிக்கல் பாடத்தில் ரோபோட்டிக் பாடம் இருந்தாலும் மாணவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்படுவதில்லை. எனவே முதலாம் ஆண்டு மாணவரில் இருந்து இறுதி ஆண்டில் படிப்பவர்களும் பயன்பெறும் வகையில் ரோபோ பயிற்சி அளிக்கவுள்ளனர். இந்த பயிற்சிக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த ஒவ்வொரு கல்லூரியும் ரூ.5 லட்சம் வரையில் செலவழிக்க வேண்டும். பயிற்சி முடிக்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். பெரிய தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெற இந்த பயிற்சி உதவும் என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment